Header Ads



“நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்போம், முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் - இன்ஷா அல்லாஹ்"


வஹ்ததே இஸ்லாமி ஹிந்த்-ன் தலைவர் மவுலானா அதாவுர் ரஹ்மான் வஜ்தி, பாபரி மஸ்ஜித் வழக்கின் முடிவு பற்றி தன்னுடைய கருத்தை தெரிவிக்கையில், 

"இந்த தற்கால விவகாரங்களில் எங்களுக்கு நீதியும் அமைதியும் கிடைக்க வேண்டும்" என்று கோ‌ரி‌க்கை விடு‌த்து‌ள்ளா‌ர்.

“நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் மேலும் சுன்னி வக்ஃப் வாரியம் சமர்ப்பித்த அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களும் திருப்திகரமானவை, முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம், இன்ஷா அல்லாஹ்." என வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் இந்த உச்ச நீதிமன்ற முடிவை சகிப்புத்தன்மையுடனும் மற்றும் கட்டுப்பாட்டுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அதீத மகிழ்ச்சியோ அல்லது இஸ்லாத்திற்கு மாற்றான செயல்களை செய்து தொல்லைகளை வெளிப்படுத்தவோ கூடாது என முறையிட்டுள்ளார்.

மஸ்ஜித் தொடர்பான இஸ்லாமிய ஷரிஆ-வை, மவுலானா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

“ஒரு முறை கட்டப்பட்ட மஸ்ஜித் என்றென்றும் மஸ்ஜித் ஆக தான் இருக்கும். எனவே பாப்ரி மஸ்ஜித் ஒரு மஸ்ஜித் ஆக இருந்தது, அது ஒரு மஸ்ஜித் ஆக தான் இருக்கிறது, அது எப்போதும் மஸ்ஜித் ஆக தான் இருக்கும். ”

"நீதிமன்ற முடிவு எவ்வாறாயினும்,  ஷரிஆ-வின் தீர்ப்பு தான் எப்போதுமே மதிக்கப்படும் "என்று அவர் முடித்துள்ளார்.

1 comment:

  1. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்வதற்காக நாம் படைக்கப்பட்வை வில்லை

    ReplyDelete

Powered by Blogger.