Header Ads



முஸ்லிம் மக்களுக்கு எதிராக, தேரர் ஒருவர் முன்னின்று செயற்பட்டார் - மகேஷ் சேனாநாயக்க

(எம்.ஆர்.எம்.வஸீம்)

71 வருடகாலமாக மக்களை பிளவுபடுத்திய அரசியல் கலாசாரத்துக்கு முடிவுகட்டி, புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வந்திருக்கின்றேன். நான் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன். மக்கள் என்னை நம்பலாம் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட பிரச்சினையின்போது தேரர் ஒருவர் முன்னின்று செயற்பட்டார். உண்ணாவிரதம் இருந்தார். அவர் யாருக்கு எதிராக உண்ணாவிரம் இருந்தாரோ அவர்கள் இருவரும் இன்று ஒரு அணியில் இருக்கின்றனர். இவர்களில் யாரை வணங்குவதென்று தெரியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை.

எனவே இந்த மோசமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, நாட்டை பொருளாதாரத்தில் முன்னேற்றமடையச்செய்ய என்னுடன் கைகோர்க்க முன்வரவேண்டும். கட்சி சார்ப்பற்ற தலைவர் ஒருவரினாலே நாட்டை கட்டியெழுப்பலாம். அதனாலே நான் எந்த கட்சியையும் சாராமல் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

2 comments:

  1. மிகச் சரியான கருத்து.பெரிய ஆட்டம் போட்ட தேரர் அடங்கிய ரகசியம் அதுதான்.இன்னும் சொல்லப் போனால் கோத்தாபாய ஒரு வேளை ஜனாதிபதியாய் தெரிவு செய்யப்பட்டால்,ஹிக்ஷ்புல்லாதான் கிழக்கின் ஆழுனர்,அதுமட்டுமல்ல அந்த நேரத்தில் ஹிக்ஷ்புல்லாவின் பழ்கலைக் கழகத்தை திறக்க வரும் அதிதிகலில் அந்த தேரோவும் இருப்பார்.ஆனால் கிழக்கு தமிழர்களை சிலர் வேறு கதைகளை கூறி முட்டாள் ஆக்குவதை பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.