தலாபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் - விஷேட சட்ட நடவடிக்கை அவசியமில்லை என்கிறது நிர்வாகம்
(எம்.எப்.எம்.பஸீர்)
காலி மாவட்டம் தலாபிட்டிய பள்ளிவாசல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த பள்ளிவாசல் மீதும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறித்த பள்ளிவாசல் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு காலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மாலைவரை சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் அல்லது நபர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த தாக்குதலில் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நடவடிக்கை அவசியமில்லை என பள்ளிவாசல் தரப்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment