அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இல்லையென அச்சப்படுவதா..? ஆறுதலடைவதா..??
- முகம்மத் இக்பால் -
ஜனாதிபதி கோத்தபாயா தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாதது புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது தென்னிலங்கையில் முஸ்லிம் விரோத போக்கினை முன்னிறுத்தியே சிங்கள மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று கோத்தபாய அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்ற வலுவான சந்தேகம் இருக்கின்ற நிலையில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாதது புதிய அரசாங்கத்தின் மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த காலங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகித்த நிலையில் முஸ்லிம் மக்களை பாதிக்கின்ற பல விடயங்கள் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டபோது அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் போராட்டம் நடாத்தி தடுத்தார்கள்.
ஆனால் தேசிய கட்சிகளின் அமைச்சரவை உறுப்பினர்களால் அவ்வாறு போராட்டம் நடாத்தி சமூகத்தை பாதிக்கின்ற விடயங்களை தடுக்க முடியுமா என்பதுதான் எமது கேள்வியாகும்.
இருந்தாலும் தேசிய கட்சியின் முகவர் மூலமாக அமைச்சர் பதவி வழங்காததையிட்டு நாங்கள் ஆறுதலடைய வேண்டும். அதாவது சிங்கள தேசிய கட்சிகள் ஒருபோதும் தனித்துவ சிறுபான்மை கட்சிகளின் பேரம்பேசும் சக்தியை விரும்புவதில்லை.
இரு தேசிய கட்சிகளுக்கிடையில் இருக்கின்ற போட்டி காரணமாக வேறுவழியின்றி சிறுபான்மை கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் உற்பட சில சலுகைகளை வழங்குவதன் மூலம் ஆட்சியை கைப்பேற்றுவார்களே தவிர, சிறுபான்மை கட்சிகளுடன் இதயசுத்தியுடன் நடந்துகொள்வதில்லை.
இதனாலேயே தங்களது சிங்கள தேசிய காட்சிகளில் அங்கம் வகிக்கின்ற தமிழ் முஸ்லிம் முகவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி அவர்கள் மூலமாக நேரடியாக சிறுபான்மை பிரதேசங்களில் அபிவிருத்தி மாயைகளை காண்பித்து சிறுபான்மை வாக்குகளை கவரும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறான செயல்பாடுகள் மூலமாக தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பேரம்பேசும் சக்திகளை சிதைவடைய செய்வதுதான் சிங்கள தேசிய கட்சிகளின் நோக்கமாகும்.
தற்போதைய அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் ஏகபிரதிநிதிகள் அங்கம் வகிக்காத நிலையில் ஆட்சியாளர்களின் முஸ்லிம் முகவர்கள் மூலமாக வழங்கப்படுகின்ற அமைச்சு பதவிகள் மூலம் அக்கட்சிக்கு ஆதரவை திரட்ட முயற்சிக்கவில்லை என்பதனையிட்டு நாங்கள் ஆறுதல் அடைய வேண்டும்.
எனவே இந்த நாட்டின் ஒரு சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில் அந்த சமூகத்துக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும்,
கடந்த காலங்களில் தனது முகவர்களைக்கொண்டு முஸ்லிம் கட்சிகளை அழிப்பதில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக மீண்டும் அந்த முயற்சியில் இன்றைய ராஜபக்ச ஆட்சியாளர்கள் ஈடுபடவில்லை என்பதனையிட்டு நாங்கள் ஆறுதல் அடைய வேண்டும்.
அமைச்சர் பதவி பதவி என ஏன் கெஞ்சுகிறீர்கள்?
ReplyDeleteமுஸ்லிம்கள் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு கண் மண் தெரியாமல் போட்ட ஆட்டம் காரணமாகத்தான் பெரும்பான்மையினர் ஒன்று பட்டார்கள். நம்மவர்கள் ஓய்வெடுத்துக்கொண்டு அடக்க ஒடுக்கத்தைக் கற்றுகொண்டதன் பின்பு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளட்டும்.
ReplyDeleteAjan pointed out an important issue; also Suhaib.
ReplyDelete