மிக எளிமையான முறையில், இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி கோட்டபாய
ஜனாதிபதியாக பதவியேற்று முதல் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ,முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க ,திறைசேரியின் செயலாளர் ஆட்டிகல உட்பட்டவர்கள் ஜனாதிபதியுடன் சென்றனர்.
இரண்டு நாட்கள் இந்தியாவில் இந்திய பிரதமர் மோடி,ஜனாதிபதி ராம் கோவிந்த் ,வெளிநாட்டமைச்சர் ஜெய்ஷங்கர்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ,காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களை கோட்டா சந்திக்கவுள்ளார்.
இந்திய அரசியல்வாதிகளுடன் நேருக்கு நேர் கதைத்து பரஸ்பர இலக்கில் சம பங்காளிகளாக தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் இலங்கை அதிகாரிகளிடம் இருக்கின்றதா? இது பெரும் கேள்விக்குறி.
ReplyDeleteGood
ReplyDeleteSL needs to Modi's association