அரசியலில் இருந்து விலக தயாராகும், சில ஐ.தே.க. எம்.பிக்கள்
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை வழங்கவில்லை என்றால், அரசியலில் விலக ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
தான் மாத்திரமல்ல மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வழங்காவிட்டால் எடுக்க வேண்டிய மாற்று தீர்மானங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால், அரசியலில் இருந்து விலகுவது என்பது தனது தனிப்பட்ட முடிவு எனவும் மேலும் சிலர் அந்த தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருக்கின்றனர்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தோற்றத்துடன் புதிய ஆரம்பம் ஏற்பட வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். அப்படி நடக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் விதம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடையில் அடுத்த சில தினங்களில் சந்திக்க உள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Send all old ones home.
ReplyDelete