Header Ads



இனியும் இவ்வாறானதொரு, ஆட்சி வேண்டுமா..? கோட்டாபய

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் சொத்துகளை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதென தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் இவ்வாறானதொரு ஆட்சி வேண்டுமா என்றும் வினவினார்.

கொழும்பு - ஹோமாகமவில் இன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இறுதி பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

இனியும் அது தொடரவேண்டுமா என்பதை நீங்கள் தெரிவு தீர்மானியுங்கள். நாட்டின் எதிர்காலத்தினருக்கு சொந்தமான நாட்டின் சொத்துகளை விற்பதற்கு அரசாங்கத்துக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை. அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முதலாவது வேலைத்திட்டமான ஜனாதிபதித் தேர்தலை வெற்றிபெறுவோமெனவும், இரண்டாவதாக பொதுத்தேர்தலிலும் வெள்வோமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.