சபாநாயகர் பதவியில் கரு தொடருவாரா..? மகிந்த பச்சைக்கொடி காட்டினாரா..??
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பல முறை கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கட்சியில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளமையினால் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க முடியாதென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் ரணில் மற்றும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் தான் தலைமைத்துவத்தை ஏற்க முடியாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் காலத்தில் கட்சியினர் இரண்டு தரப்பாக பிரிந்து குற்றம் சுமத்திக் கொள்ளும் சூழலில் கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாதென அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
தான் தலைமைத்துவத்தை பெற்றுக் கொண்டாலும் அந்த நடவடிக்கையை குழப்புவதற்கு ஒரு தரப்பினர் பார்த்துக் கொண்டுள்ளனர். தற்போதைய தலைவருடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டு பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை கரு சந்தித்துள்ளார். இதன்போது எதிர்வரும் 4 மாதங்களுக்கு சபாநாயகர் பதவியில் கருவையே தொடருமாறு மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment