Header Ads



ஜனாதிபதி கோத்தாபயவின் அழைப்பில், கிழக்கு ஆளுநராக திஸ்ஸ விதாரண..!

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே, இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதி தெரிவையடுத்து ஏற்கனவே பதவி வகித்த 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் கடதந்த வாரத்தில் உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியது.

இதற்கு அமைவாக அனைத்து ஆளுநர்களும் பதவி விலகினர்.  இதனடிப்படையில் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆனால் வடக்கு ,கிழக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை.

இந்நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கிழக்கு மாகாண ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனத்தை இவ்வாரம் பெற்றுக்கொள்ளவுள்ளார். மேலும் வடக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் குறித்த தீர்மானம் நாளை திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. Nice and he is a suitable person

    ReplyDelete
  2. கருணாவும் வியாழேந்திரனும் சொன்னதைச் செய்துள்ளனர்.எதிர்பார்த்திருந்த முன்னை நாள் அமைச்சருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் போலும். அவர்களின் தேர்தல் பிரச்சாரம் முஸ்லீங்கள் இனி முதலமைச்சராகவோ கவர்ணராகவோ வர முடியாது என்பதே.

    ReplyDelete

Powered by Blogger.