Header Ads



சுவிற்சர்லாந்து தூதரக பெண் வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதால் விசாரணைகளை தொடரமுடியாமல் இருக்கின்றது

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் இடம்பறுவதற்கு இடமளிக்கமுடியாது.

 அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதால் விசாரணைகளை தொடரமுடியாமல் இருக்கின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்ற அமைச்சர் வாசுதேவ நானயக்கார  இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர்வழங்கல் அமைச்சில் பதவியை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியாலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுவிற்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் பெண் ஊழியரை கடத்திய சம்பவம் தொடர்பாக இறுதியாக நேற்று இரவு எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர் இதுவரை எந்த வாக்கு மூலமும் பொலிஸிக்கு வழங்கியதில்லை. 

வாக்குமூலம் வழங்காவிட்டாலும் விசாரணையை தொடந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்திருக்கின்றேன்.அந்த இடத்தில் இருக்கும்  சீ.சீ டிவி கமராக்களை பொலிஸார் சோதித்துள்ளனர்.

அத்துடன் இதுதொடர்பாக விசாரணைகளை கொண்டுசெல்ல எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்தபோது நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

ஏனெனில் முறைப்பாடு எதுவும் இன்றி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. என்றாலும் நேற்றுவரை சம்பந்தப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கி இருக்கவில்லை.

அவரை முன்லைப்படுத்தியும் இல்லை. அதனால் இந்த விடயத்தில் நாங்கள் இரண்டு பக்கத்துக்கும் இறுகி இருக்கின்றோம்.

ஏனெனில் உண்மையாகவே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதை முதலாவதாக நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எந்த முறைப்பாடும் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும் இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டித்துள்ளோம்.

இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதனை நாங்கள் கண்டிக்கின்றோம். இவ்வாறான சம்பவங்களுக்கு கொழும்புக்குள்ளோ நாட்டுக்குள்ளோ இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.