Header Ads



சிறுபான்மை மக்களுடைய வாக்குகளின்றி இந்த, ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளோம்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சின்பான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி எம்மால் வெற்றிபெற முடியாது என கூறியவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி இந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் அமோக வெற்றிபெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (24) சிறீலங்கா பெரமுன ஆதரவாளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு ஒன்று அங்குராங்கெத்த பகுதியில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க இந்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் மஹிந்த ராஜபக்ஸ என்ற ரீதியில் இந்த நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களித்துள்ளார்கள். 

ஆகையால் நிம்மதியாக வாழ்வதற்கு நமது நாடு உள்ளது என நாம் என்ன முடியும். 

யாருக்கும் முடிவிற்கு கொண்டுவர முடியாத யுத்தத்தை எமது தலைவர் இரண்டரை வருட காலபகுதியில் நிறைவுக்கு கொண்டு வந்தார் இந்த நாடு முழுவதிலும் உள்ள வீதிகளை புனர்நிர்மானம் செய்தார் தோட்டப் புறங்களுக்கு கொங்ரீட் வீதி கொண்டுவரபட்டது. 

மஹிந்த ராஜபக்ஸவினால் அதே போல் பாடசாலை சுகாதார வசதி போன்ற அபிவிருத்திகளையும் முன்னெடுத்தார். 

இன்று மக்களுக்கு மீண்டும் ஒரு தலைவர் கிடைத்துள்ளார் நான் கொள்ளையிடுவதற்கோ மக்களை ஏமாற்றுவதற்கோ அரசியலுக்கு வரவில்லை எமது மக்களுக்கு சேவை செய்யவே நான் வந்துள்ளேன். 

ஜனாதிபதி ஒருவருக்கு 2500 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காணப்பட்டார்கள் ஆனால் எமது ஜனாதிபதி அதனை குறைத்து 250ஆக மாற்றியுள்ளார். 

இது போன்ற விடயங்களை தான் நாம் பேசவேண்டும் என்றார். 

-மலையக நிருபர் சதீஸ்குமார்-

1 comment:

  1. ​தனி சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றோம் என்று கூறுவதால் பேருவலை. அக்குறனை, பரகஹதெனிய ஆகிய இடங்களை உள்ளிட்ட மொட்டுக் கட்சியிலுள்ள முஸ்லிம்கள் டக்ளஸ் தேவானந்தா அணி, தொண்டமான் அணி ஆகிய சிறுபான்மை மக்களின் சுமார் 500,000 வாக்குகளுக்கும் மதிப்பும் இல்லாமல் போனதுதான் கவலையளிக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.