ரணிலை எதிர்க் கட்சித் தலைவராக்குவது பற்றி ஐதேக யில் கலந்துரையாடமலே சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய அகிலவிராஜ்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குமாறு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அனுப்பிய கடிதமொன்று சபாநாயகருக்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளாமல் குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர்களாக நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கைச்சாத்திட்ட கடிதமொன்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கிடைக்கபெற்றுள்ளதாக சபாநாயகர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
40 பாராளுமன்ற உறுப்பினர்களின் கைச்சாத்துடன் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ரனிலை (Ranilai) மக்கள் பல முறை நிராகரித்தும் ஐ தே க க்கு ரனில் தான் ஏக போக உரிமையாளர் என்கடப்பா (UNP) உங்கள் ஜனநாயகம் வெட்கமில்லாமல் இன்னும் ஐ தே க க்கு வாக்களிக்கும் முட்டாள்களை என்ன என்று சொல்ல
ReplyDelete