அரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலகுமாறு கோரிக்கை
அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழும பணிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர இது குறித்து அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்க நியதிச் சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Excellent Work...
ReplyDelete