"உங்கள் வாக்குகளை சிறந்த, தெரிவுக்காக பிரயோகியுங்கள்"
- அஜ்மல் மொஹிடீன் -
உங்கள் வாக்குகள் பெறுமதியாக்கப்பட வேண்டுமெனில் சரியான வழியில் சுயமான தீர்மானத்தை எடுங்கள்.
முன்னிலையில் இருக்கும் சஜித் பிரேமதாஸ, நந்தசேன கோட்டாபே ராஜபக்ஸ ஆகிய இருவரது கொள்கைகளையும்,இயங்கு முறையையும் கருத்திற் கொள்ளுங்கள்.அவர்களில் ஒருவரை தெரிவு செய்யுங்கள்.
வாக்குச் சீட்டில் நீங்கள் தெரிவு செய்பவருக்கு புள்ளடியை இடுங்கள், அடுத்த தெரிவு என்ற சிந்தனையை முற்றாக தவிர்த்து விடுங்கள்.
தேர்தல் அவதானிப்பாளர்கள், கருத்துக் கணிப்பார்களது இன்றைய தேர்தல் கள கருத்தின்படி இரண்டாம் சுற்று எண்ணிக்கைக்கு இடம் இருக்காது என்பதும் வெற்றியடையும் வேட்பாளர் 52℅அல்லது53℅ பெற்று வெற்றி அடையும் வாய்ப்பு உள்ளதாக குறிபிடப்படுகின்றது.
நியமனப் பத்திரம் சமர்ப்பிக்கப் பட்டு,தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் ஒரு கயிறு இழுத்தல் போட்டி( Tug of war )நிலைமை காணப்பட்டது,ஒரு நாள் சஜித் என்றும் மறு நாள் கோட்டாபே என்ற நிலைமை காணப்பட்டது,ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது.
இரண்டாம்,மூன்றாம் தெரிவு என்பதெல்லாம் போலித்தனமான பிரச்சாரங்களே,
நாட்டை நேசிக்கின்ற,நாட்டின் பொருளாதாரம்,செலவினம் என்பவற்றில் கவனம் செலுத்திகின்ற எந்த குடிமகனும் இரண்டாம் சுற்றுக்காக வாக்களிக்க மாட்டான்.
தீர்க்கமாக ஒருவரை தெரிவு செய்து வாக்களிப்பான், இல்லையேல் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருப்பான்.
முதனிலை இரு வாக்காளர்களில் ஒருவரை தெரிவு செய்பவன்,இரண்டாம்,மூன்றாம் தெரிவுக்காக நிச்சயமாக வாக்களிக்கப் போவதில்லை.
தாம்,அல்லது தாம் சார்ந்த வேட்பாளர் வெற்றி அடைய மாட்டார் என்று தெரிந்துதான் இரண்டாம்,மூன்றாம் தெரிவுமுறை மூலம் வாக்களியுங்கள் என்று பேசுகின்றார்கள்,பிரசாரம் செய்கிறார்கள்.
ஏன் முதனிலை இருவரில் யாராவது ஒருவரை ஆகக் கூடிய செயலாற்றல் உள்ளவரை தெரிந்து அவரோடு உடன்படிக்கை அடிப்படையில் இணைந்து அவர் வெற்றியடைய பிரச்சாரம் செய்ய முடியாமல் போனது,
அதற்கு கூறும் காரணம் முதனிலை இருவரும் ஒரே மட்டையில் ஊறிய மட்டைகள் என்று,அப்படியானால் நீங்கள் உங்கள் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னரே தயார் படுத்தியிருக்க வேண்டும்,
ஜே.வி.பி தலைவர் ஆகக் குறைந்தது 2018 ஒக்டோபரில் நடத்தப்பட்ட பாராளுமன்ற உள்ளக சதிப்புரட்சியை தொடர்ந்தாவது தாம் ஜனாதிபதி வேட்பாளராக இறங்குவேன் என்று வெளிப்படுத்தி செயலில் இறங்கியிருக்க வேண்டும்.
கணிசமான பெரும்பான்மை வாக்குகளை திரட்டிக் கொண்டு அந்தத் தளத்தில் நின்று கொண்டு சிறுபான்மை வாக்குகளை கோரி பிரசார களத்தில் இறங்கியிருக்க வேண்டும்.
அதை விடுத்து ஆகக்குறைந்த பெரும்பான்மை வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு தமிழ்,முஸ்லிம்,மலையக வாக்குகளை குறி வைத்துஅவர்களது பிரதேசங்களில் தீவிரமாக பிரசாரம் செய்வதும்,அதற்கு துணை போகும் அணிகளும் சிறுபான்மை மக்களை ஏமாற்றும் அல்லது திசை திருப்பும் முயற்சியா என சந்தேகம் கொள்ள வைக்கின்றது.
அடுத்து தமிழ்,முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை மட்டும் குறி வைத்து தமிழ்,முஸ்லிம்,வேட்பாளர்கள் களம் இறங்கியிருக்கின்றார்கள்.
இவர்கள் இருவரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தங்களது தொகுதிகளில் தோல்வி கண்டவர்கள்,இன்று இரண்டு லட்சம்,மூன்று லட்சம் என்று கணிப்பீட்டுக் கனவு காண்கிறார்கள்,என்ன கணிப்பீட்டு சூத்திரம் வைத்துள்ளார்களோ தெரியாது,
ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை அவ்விருவரும் கணிப்பிடத் தவறி விட்டார்கள்.
அவர்கள் ஏன் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள் என்ற உள்ளக ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது,முற்று முழுதான சுயநலம் சார்ந்த விடயம் என்பதுதான் பகிரங்கமான உண்மை.
எனவே அவர்கள் முதனிலை இரு வேட்பாளர்களில் தமக்கு மட்டுமே தேவையான ஒருவர் வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் வாக்கு எண்ணிக்கையை கொஞ்சமாவது குறைக்க முடியுமா என்ற நப்பாசையிலும்(False wish)ஜனாதிபதி வேட்பாளாராக இறங்கியிருக்கிறார்கள்.
எனவே மூன்றாம் நிலையில் எதிர்பார்க்கும் ஜே.வி.பி தலைவருக்கோ அல்லது,முஸ்லிம் வேட்பாளருக்கோஅல்லது தமிழ் வேட்பாளருக்கோ வாக்களித்து இரண்டாம் தெரிவை சஜித் பிரேமதாஸாவுக்கு அல்லது கோட்டாபே ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பது என்பது அர்த்தமற்றதும்,தங்களை தாங்களே ஏமாற்றுவதும் மட்டுமல்ல உங்கள் வாக்குகள் பெறுமதியற்றதாக்குவதும் ஆகும்.
எனவே இங்கு உங்கள் தெரிவு முன்னிலையில் கணிக்கப்படும் இரு வேட்பாளர்களான சஜித்,கோட்டாபே என்ற இருவரில் ஒருவருக்காகத்தான் இருக்க வேண்டும்.
இங்கே இனவாதத்துக்கு பயந்து அல்லது பழி வாங்கப்படுவோம் என பயந்து வாக்களித்தல் கோழைத்தனமானது.
இனவாதம் பேசுவோர் எல்லோரும் இம்முறை ஒரே கூடாரத்துக்குள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இனவாதத்துக்கு எதிராக வாக்களிப்பதானது இனவாதம் பேசி சிறுபான்மை மக்களை மிரட்டி ஆதரவு பெறுவதை விட இனவாதம் பேசாமல் சிறுபான்மையினரை அரவனைத்து அரசியல் செய்வதே ஆரோக்கியமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தமிழ்,முஸ்லிம்,மலையக மக்களின் வாக்குகள் இந்த நாட்டின் இனவாதிகளுக்கு,அராஜகம் நடத்தியவர்களுக்கு சாவுமணி அடிப்பதாக இருக்க வேண்டும்.
உங்கள் முடிவு அழுத்தங்களுக்கும், சுயநலத்திற்கும் அப்பாற்பட்டு,தேசத்திற்காக,நீதிக்காக,சுயமாக இயங்கக் கூடிய ஆளுமை உள்ளவருக்காக இருக்கட்டும்.
Ithatku en iwwalwu periya katturai .. sajithuku wakkaliungan Ena neradiyaha kettirukkalam
ReplyDeleteநான் ஜனாதிபதி ஆனால், இஸ்ரேல், பலஸ்தீன அரபிகளை வைத்திருக்கிற மாதிரி இலங்கை முஸ்லீம்களை வைப்பேன். இது கலிபோரியாவில் ஒரு திருமண வைபவத்தில் கோட்டா அவருடைய நண்பனுக்கு சொன்னது.
ReplyDeleteமேலும் கோட்டா ஜனாதிபதியானால் தமிழர்கள், முஸ்லீம்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் போடுகின்ற கடைசி வாக்காக இருக்கும். ஏனென்றால், எங்களுடைய வாக்குரிமையை ஒளிப்பதட்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
ஆகவே: மக்களே சஜித்திட்கு வாக்களித்து உங்கள் பிரஜா உரிமையையாவது காப்பாற்றி கொள்ளுழுங்கள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆகிவிடாதீர்கள். ரோட்டுல போற சனியனை தூக்கி தலையில போட்டுக்கொண்டு, அப்புறம், நோன்பு நோற்று குனுத் ஓதுவதில் எந்த பிரயோசனையும் இல்லை. இறைவனும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். ஏனென்றால் தெரிந்து கொண்டு நீங்கள் குழியில் விழுந்தால் அதட்கு நீங்கள்தான் பொறுப்பு.
Good thinking article brother
ReplyDeletewhoever do not vote directly to main candidate
ReplyDeletevote any candidate then select main candidate.
correct...
ReplyDelete