குறுகிய காலத்திற்கு மாத்திரம், சபாநாயகர் பதவியை ஏற்கத் தயார் - வாசுதேவ
சபாநாயகர் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானாயக்கார இன்று -25- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கேள்வி – சபாநாயகர் பதவிக்கு உங்களின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. உங்களின் விருப்பம் என்ன?
வாசுதேவ நானாயக்கார – அரசியல்வாதி என்ற வகையில் என்னுடைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நான் விரும்புகின்றேன். குறுகிய காலத்திற்கு எனக்கு பொறுப்பை வழங்கினால் அதனை ஏற்பதற்கு நான் தயார். அதற்காக என்னைத் தெரிவு செய்தால் மதிப்பளிப்பேன்.
கேள்வி – எதிர்வரும் 5 வருடங்களுக்கு சபாநாயகர் பதவியை ஏற்பீர்களா?
வாசுதேவ நானாயக்கார – அதற்கு வேறொரு சபாநாயகரைத் தேட வேண்டும். எதிர்வரும் காலப்பகுதியில் சபாநாயகர் பதவியிலிருப்பதற்கு நான் தயாரில்லை. அனைத்தையும் விட எனது அரசியல் செயற்பாடு முக்கியமானது.
கேள்வி – 3 மாதங்களுக்கு சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ள விரும்புகின்றீர்களா?
பதில் – ஏற்றுக்கொள்ளத் தயார். அதுவும் சிறந்த அனுபவமல்லவா. நீண்டகாலமாக சபநாயகர் பதவியின் செயற்பாடுகள் சிரமமானதாக மாற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு, அந்த சிரமத்தை எதிர்கொள்வதற்குக் கிடைக்கும் அனுபவம் பெறுமதியானது. சமல் ராஜபக்ஸவைப் போன்றே நானும் செயற்பட்டேன்.
கேள்வி – சமல் ராஜபக்ஸவை நியமித்திருக்க முடியுமல்லவா?
வாசுதேவ நானாயக்கார – அவ்வாறு செய்துவிட்டு, எனக்கு அமைச்சுப் பதவியை வழங்கியிருக்கலாம் அல்லவா.
கேள்வி – இதிலிருந்து விடுபட முடியாதா?
வாசுதேவ நானாயக்கார – இல்லை. நான் அவ்வாறு பேசுவதில்லை. ஏதேனும் காரணம் இருக்கலாம் அல்லவா. ஒரு சகோதரர் ஜனாதிபதி. சகோதரர் பிரதமர். மற்றுமொரு சகோதரர் சபாநாயகர்.
கேள்வி – பொருந்தவில்லை.
வாசுதேவ நானாயக்கார – பொருந்தவில்லை அல்லவா. அதுவே காரணமாக இருக்கலாம்.
புதிய கற்பனையுலக சபாநாயகர் வாசுதேவ!
ReplyDeleteAASAI AASAI PEERASAI
ReplyDelete70YEARS OLD STILL POWER HUNGRY