அனைத்து இலங்கையர்களினதும், பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் - சங்ககார
நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ச அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பு மற்றும் செழிப்பான வாழ்க்கை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் இட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்இ அரசியல் கட்சிஇ குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது.
அனைத்து இலங்கையர்களையும் உண்மையாக ஒன்றிணைக்கும் பார்வையும், வல்லமையும் பெறவும்இ நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் வாழ்த்துகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
சங்கைக்கு என்னுடைய வாழ்த்துகள்... இப்படியானவர்கள்தான் அரசியலுக்கு தேவை....வாழ்த்துக்கள்.....
ReplyDelete