Header Ads



கோட்டாபயவை அருகிலுள்ள சிறந்த, பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் - ரணில்

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆட்சியை கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (10) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின்கீழ்,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, அருகிலுள்ள சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவின்  80 பங்கங்களை கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனநாயகம் என்ற சொல் ஒரு இடத்தில் மாத்திரமே உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.