Header Ads



அரசர்களுக்கு பிறகு நாட்டுக்கு சிறந்த தலைவர் கிடைத்துள்ளதால், நவ சிங்கள ராவய கலைக்கப்படுகிறது

அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை என நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். 

இதனால் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்று -20- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கூடிய விரைவில் புதிய பாராளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் ஜனாதிகபதியிடமும் எதிர்க்கட்சி தலைவரிடம் வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தங்களது குழுவிலும் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. hahaha mission is impossible or over...!!!!
    This is an order from the head...just close and go home

    ReplyDelete
  2. Yes, order from the higher up. They worked for him now the mission is over.

    ReplyDelete

Powered by Blogger.