"வீட்டிற்கு தந்தையொருவர், வந்ததுபோல உணர்கிறோம்"
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இனி எந்தவித ஆர்ப்பாட்டத்தையும், குழப்பகரமான செயற்பாட்டையும் தாம் செய்யப்போவதில்லை என்று ம் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று -19- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகியதன் ஊடாக, கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அதர்மத்தை இப்போது பௌத்த தர்மம் வெற்றிகொண்டிருப்பதாகக் கூறினார்.
இப்போது சிங்கள மக்களுக்கு தலைவர் ஒருவர் இருக்கின்றார். நாட்டிற்கு சிறந்த தலைவர் உள்ளார். ஏனைய தலைவர்களை விடவும் கோத்தபாய ராஜபக்ச சொற்பளுக்குப் பொறுப்பு கூறுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஒழுக்கமுள்ள, சிறந்த தலைவராக அவரை பாதுகாப்புச் செயலாளராக இருக்கும்போது நாம் அடையாளங்கண்டோம். திரும்பவும் ஆர்ப்பாட்டம் செய்ய, குழப்பம் விளைவிக்க எமக்கு உத்தேசமில்லை.
காரணம் என்னவென்றால், கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் சட்டம் சரிவர அமுல்படுத்தப்படாதிருந்தது.
அதனால் புதிய சட்டங்களை அமுல்செய்ய பேசுவதோடு அமுலில் உள்ள சட்டங்களை பலப்படுத்தி வடக்கு, தெற்கு என்ற வித்தியாசமின்றி முழு நாட்டிற்கும் ஒரே சட்டத்தை அமுல்படுத்தி வீழ்ச்சியடைந்த நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
புராதன சின்னங்கள் உட்பட பல விடயங்களில் சட்டங்களை பலப்படுத்த வேண்டும். இன்று சிங்கள மக்களுக்களுக்கு பொறுப்புகூறுகின்ற தலைவர் உள்ளார். வீட்டிற்கு தந்தையொருவர் வந்ததுபோல உணர்கிறோம்.
கடந்த காலத்தில் எமது இனம் அநாதையாகியது. அதனால் துட்டகைமுனு சிலைக்கு முன் கோத்தபாய நேற்று முழங்கிய வெடி எமக்கு பலத்த நம்பிக்கையை தந்தது. இப்போது நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்.” என கூறினார்.
Well done ஞானசார பிக்கு சார்
ReplyDeleteCongratulations
Hope you will get a minister post
Appa
ReplyDeleteஇதுக்குத்தான் ஆசைபட்ட பாலக்குமார
ReplyDeleteஆர்ப்பாட்டம், குழப்பகரமான செயல்பாடுகளின் பிதாமகன் நான் தான் என ஏற்றுக் கொண்டதே போதும். இனி நாடு செழிக்கும்.
ReplyDeleteI appreciate
ReplyDelete