"ஜப்னா முஸ்லிம் இணையம், தடை செய்யப்படும் என்பதில் உண்மை இல்லை"
இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் தடை செய்யப்படுமென, சில தரப்புக்கள் பரப்பிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என Jaffna Muslim இணையம் மிகவும் பொறுப்புடன் கூறுகிறது.
ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தநேரத்திலும் Jaffna Muslim இணையம் தடை செய்யப்படலாமென்ற போலித் தகவல் பரவ விடப்பட்டு, தமது பேஸ்புக் பக்கத்தை Like செய்யும்படி சிலர் மிகவும் கீழ்த்தரமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் எமது இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நாம் கூறவிரும்புவது யாதெனில்,,
Jaffna Muslim இணையமானது எந்த கட்சி சார்பற்றது. நேர்மையுடன் ஊடக நெறிகளை பின்பற்றி பயணிக்கிறது. தற்போதும் அவ்வாறே செயற்படுகிறோம்.
எனவே எவருக்கும், எவ்வகையிலும் Jaffna Muslim இணையத்தை தடைசெய்ய காரணம் கிடையாது என்று நம்புகிறோம்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது Jaffna Muslim இணையம் தடை செய்யப்பட்டது உண்மைதான். அதற்கு சில அரசியல்வாதிகளின் தவறான தூண்டுதலே காரணமாக அமைந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
www.jaffnamuslim.com
முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஊடகங்கள் இல்லாத நிலையில் தங்களை போன்ற ஊடகங்கள் முஸ்லீம் சமூகத்துக்கு மிகவும் தேவைப்பாடாக காணப்படுகின்றது .மேலும் இந்த ஊடகம் வளர்ச்சி பெறவேண்டும் .இதனால் தேர்தல் காலங்களில் சமூகத்தின் நம்மை கருதி எந்தவொரு அரசியல் கட்சி விளம்பரங்களுக்கும் இடமளிக்க வேண்டாம் .
ReplyDelete