"வெற்றிக்கு தந்தையர்கள் அதிகம், தோல்விக்கு அப்பன் பெயர் தெரியாது"
ஜனாதிபதித் தேர்தல் தோல்வி சம்பந்தமாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொள்வதில் பலனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று -25- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சில தரப்பினர் பௌத்த சமயம் சம்பந்தமான வெளியிட்ட கருத்துக்கள் தோல்விக்கான கடும் அழுத்தங்களை கொடுத்தது எனக் கூறியுள்ளார்.
தேர்தலில் தமது வேட்பாளரின் வெற்றிக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்லாது பிரதேச தலைவர்களும் வேலை செய்தனர்.
இதனால், எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. சிறிகொத்தவில் இருந்தவர்கள் இரவு பகல் பாராது பாடுபட்டனர்.
150க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினோம். இதற்காக அனைவரும் முடிந்தளவான அர்ப்பணிப்புடன் வேலை செய்தோம்.
வெற்றிக்கு தந்தையர்கள் அதிகம், தோல்விக்கு அப்பன் பெயர் தெரியாது. இதனால், தோல்வியடைந்த பின் பல்வேறு கதைகளை பேசுகின்றனர்.
ஏதோ ஒரு காரணத்திற்காக வெற்றி கிடைக்கவில்லை. பௌத்த வாக்கு வங்கியை பாதுகாத்து செயற்பட்டிருக்கலாம் சில சந்தர்ப்பங்களில் அதற்கு தடைகள் ஏற்பட்டன.
சில அரசியல் தலைவர்களின் கருத்துக்களால் பௌத்த வாக்கு வங்கி சிதறி போனது. குற்றம் சுமத்துவோர் தம்மை நோக்கியும் விரலை நீட்ட வேண்டும்.
கண்ணாடி முன்னால் சென்று பார்த்தால் இந்த நிலைமையை காண முடியும். எனது தொகுதியிலும் இதனை காண முடிந்தது.
இதனால், நபர்கள் மீது குற்றம் சுமத்துவது பொறுத்தமானதாக இருக்காது எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை நடைபெற்ற யூஎன்பீயின் படுதோல்விக்கு பிரதான காரணம் அகிலவிராஜ் காரியவசம்.
ReplyDelete