இனவாத முஸ்லிம் கட்சிகள் சஜித்துடன் இணைந்துள்ளன - அவர் ஜனாதிபதியானால் தமிழர்களின் கதை முடிந்தது
- பாறுக் ஷிஹான் -
வருகின்ற சனாதிபதி எப்படியானவர் எப்படி அவரை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வியூகத்தை அமைத்திருக்கின்றோம் என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவினை ஆதரித்து புதன்கிழமை(13) மதியம் கல்முனையில் தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
வருகின்ற சனாதிபதி எப்படியானவர் எப்படி அவரை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வியூகத்தை அமைத்திருக்கின்றோம்.ஆனால் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவின் பின்னால் இருப்பவர்களை பார்த்தோமானால் அவருடன் அனைத்து இனவாத முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்திருக்கின்றன.
இந்த நிலையில் சனாதிபதி தேர்தல் தமிழர்களின் இருப்பா? முஸ்லிம்களின் இருப்பா என்பதை முடிவு செய்கின்றது.சஜித் பிரேமதாச சனாதிபதியானால் தமிழர்களின் கதை முடிந்தது. கல்முனை பறிபோகும் இ வாழைச்சேனை பறிபோகும் எல்லாம் பறிபோகும். இனவாதிகளின் தலைவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்கலாம் இமுதலமைச்சர் பதவி கொடுக்கலாம்இஅமைச்சு இபிரதியமைச்சு பதவிகளும் கொடுக்கப்படலாம் .எல்லாமே நடக்கும் இதனால்தான் எங்களது கருணா அம்மான் பல்வேறு திட்டங்களை வகுத்து ஒப்பந்தங்களை போட்டு கோட்டாபய ராஜபக்ச அவர்களை ஆதரிக்க முடிவு செய்தோம்.
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் கருணா அம்மான் பிரதி அமைச்சு பதவிகளை எடுத்து பல்வேறு அபிவிருத்திகளை செய்யமுடிந்தது. சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சர் பதவியை எடுத்து பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்தார். கடந்த நல்லாட்சி அரசில் எதுவுமே நடைபெறவில்லை என தெரிவித்தார்.
நீங்கள் சொன்னதில் சிறு திருத்தம். சஜித் பிரேமதாச வென்றால் முஸ்லிம்களே நடுக்கடலில் தத்தளிப்பர்.நீங்கள் டயஸ்போறாக்களைக் கொண்டு அனைத்தையும் சாதிப்பீர்கள்.அதில் முதலாவது கல்முனை கபளிகரம் செய்யப்படும்.
ReplyDelete