புல்மேயும் எருமை மாடுகள், முதலைகளுக்கு இரையாகும் பரிதாபம் - அதிகாரிகள் கவனிப்பார்களா..?
- பாறுக் ஷிஹான் -
வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது.
அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் .ருமருங்கிலும் அதிகளவிலான முதலைகள் நடமாடுவதனால் தினமும் இச்சம்பவம் இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்தனர்.
அண்மையில் பெய்த மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் அதிகமான சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் நடமாடுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.
.
மேற்படி பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இது மிக முக்கியமான பிரச்சினை, அந்த ஊரில் உள்ளவர்கள் இதுபற்றி சனாதிபதிக்கும் உயர் அ்திகாரிகளுக்கும் அறிவிக்கலாமே.
ReplyDelete