Header Ads



முஸ்லிம்களுக்கு எதையும் விசேடமாக கூற வேண்டியதில்லை - மகிந்தகால அனுபவம் அவர்களிடம் இருக்கிறது

சாதாரண தமிழ் மக்களை வெள்ளைக் கொடியுடன் வரக் கூறி, அவர்களை சுட்டுக் கொலை செய்து, நந்திக்கடலில் இரத்த ஆறு ஓடவிட்டமையா தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் செயல் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஈழம் அவசியமென நான் நினைக்கவில்லை. சிங்கள மக்களுக்கு வழங்கும் உரிமைகளைப் போன்று எங்களுக்கும் சமவுரிமைகளை வழங்குமாறு கோருகின்றனரே தவிர யாரும் ஈழம் வேண்டும் எனக் கேட்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தமிழர் தரப்பு முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு தயாரில்லை என்பதைத் தாண்டி நிறைவேற்ற முடியாத விடயங்கள் இருக்குமாயின் அது குறித்து இந்த சூழலில் பேசுவது பொருத்தமற்றது.

தேர்தல் நேரத்தில் இவ்வாறான கோரிக்கைகளை முன் வைப்பதை விடவும் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்திருக்கலாமே.

வாக்களிப்பை புறக்கணிப்பது அல்லது பிரதான இரு வேட்பாளருக்கும் அளிக்கப்படாத வாக்குகள் அனைத்தும் வீணடிக்கப்படும் வாக்குகளாகும்.

அவ்வாறு வாக்களிக்காதிருப்பது வட, கிழக்கு மக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்குச் செய்யும் பாரிய தவறாகும். முழுமையான சர்வாதிகார ஆட்சிக்குச் செல்வதா அல்லது மீண்டும் இந்த நாட்டில் முழுமையான ஜனநாயகத்தை நிலைநாட்டும் முடிவை எடுப்பதா என்பதை சிந்திக்க வேண்டும்.

இந்த தேர்தலில் முஸ்லிம் மக்களின் வகிபாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால், முஸ்லிம் மக்களுக்கு விசேடமாக நான் எதையும் கூற வேண்டியதில்லை. 2013ஆம் ஆண்டு தொடக்கம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நடைபெற்ற விடயங்களும் அதன் பிரதிபலிப்புக்களின் அனுபவங்களையும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

No comments

Powered by Blogger.