Header Ads



ஹக்கீம் - றிசாத் மீது விரைவில் நடவடிக்கை எடுங்கள், ஏற்படுத்திய பாதிப்புகளுக்கும் பதிலளிக்கவேண்டும்.

கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவே வழிநடத்தியதாக ராவணா பலய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ரிசாட் பதியூதீன், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

புதிய இடைக்கால அமைச்சரவைக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜயந்த சமரவீர இன்றைய தினம் தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு ஆசி வழங்குவதற்காக பௌத்த தலைமை பிக்குகள் அழைக்கப்பட்டிருந்ததோடு இதில் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று நாட்டிலிருந்து பலர் தப்பிச்செல்லப் பார்க்கின்றார்கள். அண்மையில் நிஷாந்த டி சில்வா என்ற அதிகாரி தப்பிச்சென்றார். அதன் பின்னர் ஷாணி அபேசேகர உள்ளிட்ட திருடர்கள் தப்பிச்செல்லப் பார்க்கின்றார்கள்.

சிறிகொத்தவில் நடத்திய ஊடக சந்திப்பில் இதுபற்றி கருத்து வெளியிட்ட முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துகோரள இதற்கு நாங்கள் என்ன செய்வது என்று கூறியிருக்கின்றார். அவர்கள் சொன்னதைத்தான் அந்த அதிகாரிகள் செய்தார்கள்.

சிறிகொத்தவே குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பாதுகாத்தது. இவ்வாறு தப்பிச் செல்லாத ரிசாட் பதியுதீன் மற்றும் ஹக்கீம் போன்றவர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு மிகவிரைவில் பதிலளிக்கவேண்டும்.

மக்கள் இவற்றையே எதிர்பார்க்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே திரிகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. UNP ஆட்சிக்கு வருவதற்கு கடந்த ஆட்சியில் களவு,கொள்ளை,கொலை நடந்துள்ளது அவர்களைக் கைது செய்து விசாரணை செய்ய அதிகாரம் கேட்டார்கள் மக்கள் அதிகாரம் வழங்கினார்ள். அவ்வாறு வந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. எனவே UNP யினர் எம்மை ஏமாற்றியிருக்கின்றனர் என உணர்ந்தனர். தற்போது ஆட்சிக்கு வந்தவர்கள் முஸ்லீங்கள் சட்டம் நீதி ஒழுங்கினைக் கடைப்பிடிப்பதில்லை தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றனர் (உண்மை இல்லாமலுமில்லை) அவர்களுக்கு பாடங்கற்றுக் கொடுக்க ஒன்று சேருங்கள் என்ற கோசத்தை சமயத்தலைவர்களூடாக மக்கள் மனதில் விஷமேற்றியே இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். எனவே யாராவது முஸ்லீம் தலைவர் ஒருவரை பொதுத்தேர்தலுக்கு முன்பு கைது செய்து சிறையிட வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய அரசாங்கம் இருக்கின்றது. தவறும் பட்சத்தில் தீவிர போக்குள்ள சமயவாதிளும் மக்களும் அதிருப்தி அடைவர் என்ற ஆபத்தான நிலை ஏற்படும். அரசியல் வெற்றிக்காக மிகவும் ஆபத்தான ஆயுதத்தைக் கையில் எடுத்த அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை ஒட்டியதாக அமைவது என்பதனை எதிர்பார்க்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.