பாராளுமன்ற கூட்டத்தொடரை, முடிவுக்கு கொண்டுவர முயற்சியா..?
பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்கள் பல கடந்த சில நாட்களாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட வேண்டும் என்பதோடு, மீண்டும் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்கான திகதியும், நேரமும் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டதும் ஜனாதிபதியால் அக்ராசன உரை இடம்பெறுவது முன்பிருந்தே பின்பற்றப்படும் சம்பிரதாயமாகும்.
எவ்வாறாயினும் ஜனாதிபதிக்குள்ள அபிமானத்திற்கு அமைய அக்ராசன உரை நிகழ்த்தபடாமல் இருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் பாராளுமன்ற உயர் அதிகாரி ஒருவர் அததெரணவுக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை டிசம்பர் மூன்றாம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் பாராளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதி தொடர்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அது இன்னும் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நடைமுறையில் உள்ள எட்டாவது பாராளுமன்றம் நான்கு தடவைகள் ஆயுட்காலத்தை நிறைவு செய்துள்ளது.
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றம் இதுவரை 43 தடவைகள் தனது ஆயுட் காலத்தை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment