இந்தியாவில் செங்கம்பள வரவேற்பையும், அணிவகுப்பு மரியாதையும் பெற்ற ஜனாதிபதி கோட்டாபய
இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபயவை வரவேற்றனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் கோட்டாபய சந்தித்தார் .
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி கோட்டபாய
“இருநாட்டு உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் – பாதுகாப்பு , பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டார்.
Post a Comment