கிறீஸ் பூதங்களை, முஸ்லிம்கள் மறக்கமாட்டார்கள் - தௌபீக்
அடக்கு முறைகளுக்கு அஞ்சிவாழும் சமூகமாக ஒருபோதும் முஸ்லிம் சமூகம் வாழ முடியாது. கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட கிறீஸ் பூதங்களை முஸ்லிம் மக்கள் மறக்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.
மூதூரில் சஜீத் பிரேமதாசாவை ஆதரிக்கும் முகமாக நடாத்தப்பட்ட மக்கள் கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று பணம் கொடுத்தாவது மக்களை ஏமாற்றலாம் என்ற மாயையில் மக்களை திசை திருப்பும் நோக்கில் சில கும்பல்கள் ஈடுபடுவதாகவும் பேசப்படுகின்றது.
இவ்வாறானவர்கள் ஏன் வெற்றியை பெறலாம்தானே. நாட்டை சுபீட்சமாக வழி நடத்திச் செல்லக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு அணி திரள்வதில் ஏற்படும் தடுமாற்றம் தான் அது.
யாவருக்கும் புகழிடம் வழங்கிய அமரர் ரணசிங்க பிரேமதாசாவின் புதல்வர் இந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கும் தேவையான அனைத்து நலன்களையும் உறுதிப்படுத்தும் முகமாக புகழிடங்களை சஜித் பிரேமதாசா வழங்குவார் என்பதில் ஐயமில்லை என்றார்.
எப்படி மறக்க முடியும் -அந்த பாழாய்ப்போன கொடூரமான கிரீஸ் பூதங்களின் அட்டகாசங்களை-அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் சூலிச்சுக்காரர்களின் சூழிச்சிக்கான தண்டனைகளை அவரவருக்கு அளவிட்டு கொடுப்பதில் என் ரப்பு மிகவும் நேர்தியானவன்- மர்சூக் மன்சூர்- தோப்பூர்
ReplyDeleteஇனவாத குழுக்களின் முதன்மையானவன் டான் பிரசாத் தலைமையில் புதிதாக ஒரு கூட்டம்- முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி கொண்டு திரிகிறது-சிங்கள சகோதரர்களிடம் முஸ்லிம்களையும் தமிழர்களையும் எதிரிகளாக இந்த நாட்டை கைப்பற்ற போகிறார்கள் என்று இனவாத போலிப்பிரச்சாரத்தை மேட்கொண்டு கோத்தாவை வெல்லவைக்க முனைகிறார்கள்.
ReplyDeleteமர்சூக் மன்சூர்- தோப்பூர்