Header Ads



மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டுமா..?

நாட்டின் சகல நீதித்துறை உள்ளடங்களாக சகல முக்கிய  வளங்களையும் ஒரு குடும்பம் கையகப்படுத்தி வைத்திருந்த யுகமே 2015 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தி முன்னயின் ஜனாதிபதி வேட்பாளர் மீண்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா என்றும் வினவினார்.

கொழும்பு ​- மஹரகமவில் இன்று (13) நடைபெற்ற தேசிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

2015 க்கு முன்பே ஆட்சியிலிருந்து குழுக்கள் தற்போதும்  அவர்களின் அட்டகாசங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்திய வண்ணமே இருந்தனர் எனவும்,  அமைச்சர்களை மட்டுப்படுத்தி​யே ஆட்சியை கொண்டு நடத்தினர் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு வரும் எந்தவொரு அச்சுறத்தலையும் எதிர்தரப்பை கொலைச் செய்தாவது அவற்றிலிருந்து தப்பிகொள்ள தயங்கவில்லை என சாடிய அவர், லசந்த விக்கிரமதுங்க, எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்த கதி அவற்றுக்கு தகுந்த உதாரணம் எனவும் தெரிவித்தார்.   

மறுமுனையில் சகல தரப்புகளிலும் உள்ள இனவாதிகளை பலப்படுத்தி நாட்டுக்குள் என்றும் மோதல் இருக்க வேண்டும் என்ற நிலைமையை தோற்றுவித்திருந்தனர் என்றும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற அடுத்த சில நாள்களிலேயே கோட்டாதான் பின்னணியில் இருந்தார் என்பது சகலருக்கும் தெரியவந்தது என்றும் சாடினார். 

No comments

Powered by Blogger.