எந்த தேர்தல்களிலும் பிக்குகளை போட்டியிட அனுமதிக்கக்கூடாது - கோத்தாபயவிடம் கோரிக்கை
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாது எதிர்காலத்தில் வேறு எந்த தேர்தல்களிலும் பௌத்த பிக்குகளை போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என மிஹிந்தல ரஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதி வலவகஹென்குணவேவ தம்மாரத்ன தேரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும் ஏனைய கட்சித் தலைவர்களும் பௌத்த பிக்குகளை தேசிய பட்டியலிலும் உள்வாங்கக் கூடாது என்றும் அவர் தெரிவிக்கிறார். விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் ஜனாதிபதி கோத்தாபய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
ஆகவே அவர் நாட்டின் தேசியத்தையும் மத விவகாரங்களையும் பாதுகாப்பார் என்பதில் சந்தேகமில்லை. அது தொடர்பான சகல விவகாரங்களையும் சிறப்பாக முன்னெடுப்பார் என தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.
யார் போட்டியிடலாம், போட்டியிடக கூடாது என்று சொல்ல ஜனாதிபதிக்கு உரிமையில்லை
ReplyDelete