சிங்கள பௌத்தர்கள் பிளவுப்படாமல் முஸ்லிம் அடிப்படைவாதிகள் உள்ள அணியை தோற்கடிக்க வேண்டும் - ஞானசார
நாடு தற்போது மரணிக்கும் நிலைமையை அடைந்துள்ளதாகவும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதான கட்சிகளில் இருக்கும் சிங்கள பௌத்தர்கள் நாடு குறித்து சிந்தித்து பிளவுப்படாத தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பிரிவினைவாதம் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தும் அணிக்கு அதிகாரத்தை வழங்கி சிங்களத்துவத்தை பலவீனப்படுத்த இடமளிக்கக் கூடாது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இம்முறையும் அந்த அணியில் இணைந்துள்ளன. இதனால், சிங்கள பௌத்தர்கள் பிளவுப்படாமல் அந்த வேலைத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் தான் எங்களை ஒற்றுமைப் படுத்தினீர்கள். மிக்க நனறி தேரர் அவர்களே. எங்கள் மேடைகளில் இப்போதெல்லாம் கட்சிபேதம் காண முடிவதில்லை. (ஓரிரு திக்கற்றவர்களைத் தவிர)
ReplyDelete