ஜனாதிபதியை சந்தித்தது உண்மை, வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்கமாட்டேன், அது முற்றிலும் வதந்தி
வடமாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இதனை கூறியுள்ளார். வட மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தைமேற்கொள்ள முன்னர் முரளிதரனுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது குறித்து முத்தையா முரளிதரனுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதியை நேற்று இரவு சந்தித்தது உண்மைதான். எனினும், வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அது முற்றிலும் வதந்தி” என கூறியுள்ளார்.
Kuranku Kayil Poo malaiya?
ReplyDelete