சமயத் தலைவர்கள் அரசியல் மேடைகளில் ஏறுவது, நாட்டுக்கு பெரிய அழிவை ஏற்படுத்தும்
அரசியல் தலைவர்களை தெரிவு செய்யும் போது மக்கள் புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ருகுணு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்கு தேவையான நீதி, நியாயம், முன்னேற்றத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
சமய தலைவர்கள் அரசியல் மேடைகளில் ஏறுவதற்கு பதிலாக மேடைக்கு வெளியில் இருந்து நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.
சமய தலைவர்கள் அரசியல் மேடைகளில் ஏறுவதன் மூலம் நாட்டுக்கு பெரிய அழிவை ஏற்படுத்தும் எனவும் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment