Header Ads



சஜித்தினால் ஒரு வலுவான, போட்டியைகூட ஏற்படுத்த முடியவில்லை - நவீன்

ஜனாதிபதித் தேர்தலில் யார் களமிறங்க வேண்டும் என்ற மக்கள் கருத்து கவனத்தில் கொள்ளப்பட்டது, ஆனால் அதன் விளைவுதான் வருத்தமளிக்கிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் அவர் அமைச்சின் ஊழியர்களுடன் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும்,

எங்களின் வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது, மேலும் அவரால் ஒரு வலுவான போட்டியை கூட ஏற்படுத்த முடியவில்லை.

நடந்தது குறித்து வருந்துகிறோம். ஆனால் அது ஏன் நடந்தது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் விரல் காட்ட முடியாது, மாறாக, இந்த தோல்வியை ஒரு கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு கட்சியாக நாங்கள் எங்களை சுயவிமர்சனம் செய்திருக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சஜித்தை தெரிவு செய்துவிட்டு, நமக்கு கண் போனாலும் பரவாயில்லை சஜித்துக்கு சகுனப்பிழையாகட்டும் என்பதுபோல உள்குத்து வேலைகளில் ஈடுபட்டவர்களே இதுபோல பேசி வருகின்றீர்கள்...

    ரணிலையோ அல்லது வேறு யாரையுமோ நிறுத்தியிருந்தால் கட்டுப்பணம் கூட கிடைத்திருக்காது!

    ReplyDelete

Powered by Blogger.