Header Ads



மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் வாய்ப்பு குறைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது, பதவி விலக தயாராக இருப்பதாக தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியிருந்தனர்.

எனினும் தற்போதைய நிலைமையில் அவர்களில் எவரும் பதவி விலக தயாரில்லை என்பதுடன் அதனை நிராகரித்துள்ளனர்.

சிலர் முன்னளாள் ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என்பதுடன் மேலும் சிலர் அவரது தொலைபேசி அழைப்புக்களை துண்டித்துள்ளனர்.

7 comments:

  1. ஐயா, நீங்கள் செய்த சே...வைக்கு இறைவன் தந்த பரிசு.அனுபவி ராசா அனுபவி. இதுதான் தண்டனையோ?

    ReplyDelete
  2. ஆறுகடந்தபின்பு அண்ணன் என்னடா தம்பியென்னடா..பதவியிழந்த பின்பு ஜனாதிபதியென்னடா பிரதமரென்னடா...?

    ReplyDelete
  3. Good
    முட்டாள்தனமாக பல முடிவுகளை எடுத்து, தான் திறமையற்றவர் என பல தடவைகள் நிரூபித்தவர். அவைகளில் ஒன்று ஹிஸ்புல்லாவை கிழக்கு கவரனராக நியமித்தது.

    ReplyDelete
  4. இந்தப் பேயனை நாட்டில் களவாடிய அனைத்தையும் மீண்டும் ஒப்படைக்க ஏற்பாடு செய்தபின்னர் நாட்டிலிருந்த துரட்சிபடுத்தப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. You should retire from politics because you have not done your duty as President. Neglect Easter attack warning.

    ReplyDelete

Powered by Blogger.