ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுமாறு, சிவாஜிலிங்கத்திடம் அன்பாக கேட்கிறேன் - சம்பந்தன்
ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திடம் அன்பாக கேட்டுக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் நினைவு தினம் சாவகச்சேரியில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன் போது பேசிய சம்பந்தன்,
தமிழ் மக்களின் வாக்குகளை உடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நாங்கள் இடம் கொடுக்க முடியாது. ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சிவாஜிலிங்கம் இந்த தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
என்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து அவர் இந்த செயல்பாட்டை செய்வார் என்று நம்புகிறேன். அவரிடம் மிக அன்பாக ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Post a Comment