Header Ads



ஜனாதிபதி கோட்டாபய இன்று கூறிய, "உண்மைச் சம்பவம்"

அரச ஊழியர்கள் பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உண்மையாக இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் ஊடாக வெளிக்கொணர்ந்துள்ளமை அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தனது வாக்குரிமையை பயன்படுத்த அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் மீண்டும் அவர் அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு தேவையான அரச நிர்வாக அலுவல்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அரச காரியாலயம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, அந்த காரியாலயத்தில் முதல் மாடியில் அமர்ந்துள்ள அரச அதிகாரி ஒருவர் கையொப்பம் ஒன்றினை பெறுவதற்காக இரண்டாம் மாடிக்கு அனுப்பி வைத்துள்ளார். இரண்டாம் மாடியில் இருந்தவர் தனக்குறிய மேலதிகாரியிடம் கையொப்பம் பெற்று வருமாறு பிரிதொரு அதிகாரியிடம் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு 12 கையொப்பங்களை பெறுவதற்கு அமெரிக்காவில் இருந்து வந்த குறித்த நபர் பல அதிகாரிகளை சந்திக்க முயன்ற போதிலும் அவர்கள் கடமைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

இறுதியாக குறித்த நபர், முதல் மாடியில் சந்தித்த அரச அதிகாரியை மீண்டும் சந்தித்து விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார். அனைத்து விடயங்களையும் கேட்டுக்கொண்ட குறித்த அரச அதிகாரி மேற்குறிப்பிட்ட 12 பேரின் அனுமதியின்றி தன்னாலும் கையொப்பமிட முடியாது என கூறி நிராகரித்துள்ளார்.

மன விரக்தியடைந்த குறித்த நபர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நடந்தவற்றை கூறி, இலங்கையில் இந்த நிலையை முற்றாக ஒழிக்குமாறு கூறியுள்ளார். 

இந்நிலையில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவிகளானது பொறுப்புக்கள் மாத்திரமேயன்றி சிறப்புரிமைகள் அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய நிகழ்வின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் 27.11.2019உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. மிக முக்கியமான விடயம். இது இருக்கக் கூடாது.

    ReplyDelete
  2. Its natural malpractice in Sri Lankan office routines. but there are very good officers too. However, this practice must be evaded out with the help of the same officers.

    ReplyDelete
  3. Good, also need to assign the qualified people's to the positions.

    ReplyDelete
  4. THIS HAPPENED TO ME JUST ONE MONTH AFTER 1983 JULY RIOTS.I APPLIED FOR A PASSPORT.A SINGALEASE STAFF WORKING WITH ME SPOKE TO HIS FRIEND AND ARRANGE TO GET MY PASSPORT WITH OUT DELAY.MY FRIEND WAS TOLD OVER THE PHONE THAT MY PASSPORT WAS READY FOR COLLECTION.I WENT TO OLD PASSPORT OFFICE NEAR GALLFACE AND MET THAT FRIEND CALLED ANANDA.HE SAID THAT THE BOSS MR.... IS HAVING THE PASSPORT WITH HIM AND I HAVE TO COLLECT SAME FROM HIM.I WENT IN TO HIS CUBICAL AND WANTED MY PASSPORT.HE TOLD ME IN SINGALA APPIDA KISSIMA SALKELIMA NATHTUWA PASSPORT EKA HOMADA BARADENA? THAT MEANS HE WANTED SOME MONEY FROM ME.I TOLD HIM THAT I DO NOT HAVE ANY MONEY WITH ME NOW I WILL GO TO BANK IN COME BACK.I PUT SOME NEWS PAPER PIECES IN SIDE AN ENVELOP AND WENT TO SEE HIM.HE WANTED TO PUT THE ENVELOP IN TO WAIST PAPER BASKET NEAR HIS TABLE AND GAVE ME THE PASSPORT.I LEFT THE OFFICE IN A HURRY AND RAN AWAY.NO BODY GOTHAPAYA OR LORD BUDDA WILL NOT BE ABLE TO PUT A FULL STOP TO THIS TYPE OF THINGS IN SRILANAKA.

    ReplyDelete

Powered by Blogger.