ஆளுநர் முஸம்மிலுக்கு எதிரான, எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணமா...??
வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ள மைக்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி முதல் குருநாகல் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையையடுத்து அவர் பதவியைப் பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் முஸம்மிலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் நேற்றும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கவில்லை. “முஸ்லிம் ஆளுநர் எங்களுக்கு வேண்டாம் சிங்களவர்கள் நாம் வாக்களித்து இவர்களிடம் மண்டியிடலாமா?” எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே ஒட்டப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணத்துக்கு ஆளுநராக நியமனம் பெறுபவர்கள் சில பெளத்த சம்பிரதாயங்களைப் பேண வேண்டியுள்ளதாலே முஸ்லிம் ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது.
குருநாகலிலுள்ள எத்கந்த விகாரையில் நடைபெறும் பெரஹரா நிகழ்வினையடுத்து பெளத்தர்களால் செய்தியொன்று ஆளுநரிடம் கையளிக்கப்படுவது சம்பிரதாயமாகும். இந்தச் செய்தியை முஸ்லிம் ஆளுநரிடம் கையளிப்பதா? என்றும் அம்மக்களால் வினவப்படுகிறது.
அத்தோடு ஆளுநரின் அலுவலகம் அமைந்துள்ள மாளிகாவ வளாகத்தில் அரச மரமொன்றும் இருக்கிறது. புதிதாக நியமனம் பெறும் ஆளுநர் அங்கு சில அனுஷ்டானங்களை மேற்கொள்வது சம்பிரதாயமாகும். இந்த மாளிகாவ அலுவலகத்துக்கும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகாவைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆளுநர் முஸம்மில் சுமுகமான சூழ்நிலையில் கடமையேற்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை ஆளுநர் முஸம்மிலைத் தொடர்பு கொண்டு வினவியபோது எதிர்வரும் திங்கட்கிழமை 2 ஆம் திகதி முற்பகல் 9.30 க்கு கடமையைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல், யு.எல்.முஸம்மில்
அதெல்லாம் அவர் செய்வார் நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள்...
ReplyDelete