Header Ads



நான் எப்போதும் உங்கள், வீட்டு பிள்ளைதான் - மகிந்த உருக்கம்

பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக நாம் என்றும் இருப்போம் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 12.11.2019 இன்று கொட்டகலை விளையாட்டு மைதானத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் அங்கு தனது உரையில் தெரிவித்த அவர்,

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வகையில் கோத்தாபய ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார். உங்கள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்மிடத்தில் முன்வைக்கப்பட்ட பெருந்தோட்ட சமூகத்தின் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவோம்.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் வாழ்க்கை அபிவிருத்தி தொழில் போன்ற விடயங்களை நாம் மலையக மக்களின் மேம்பாட்டுக்காக முன்னெடுப்போம். அதேநேரத்தில் மலையக சமூகத்தின் கல்வியை உயர்த்தியவர்கள் நாம் பாடசாலைகளில் மஹிந்தோதைய திட்டத்தின் கீழ் விஞ்ஞான கூடங்கள் நூற்றிற்கும் அதிகமாக அமைத்து கொடுத்தவர்கள் நாம் எனவே மலையக மாணவர்களின் குறிப்பாக பெருந்தோட்ட பகுதி மாணவர்களுடைய கல்வியில் கூடிய அக்கறை செல்லுத்துவோம்.

எனது ஆட்சியின் காலத்தில் பெருந்தோட்டங்களில் பாதைகள் அமைத்தது உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தது இதை தவிர இப்போது எவர் அபிவிருத்திகளை செய்து இருக்கின்றார்கள் என கேள்வி எழுப்பினார்.

ஐயாயிரம் ரூபாய் கிடைத்ததா என மேலும் கேள்வி எழுப்பி அவர் பொய்களை சொல்லி வாக்குகளை கேட்டு வருவதற்கு நீங்களே பதில் கூற வேண்டும். நாளை நமதே இந்த நாடும் நமதே நான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகும் இது நிச்சயம். நான் செய்வதை சொல்வேன். சொல்வதை தான் செய்வேன்.

பெருந்தோட்டங்களில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் மக்களினுடைய தேவைப்பாடுகள் தொடர்பிலும் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எமக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். 

அதனடிப்படையில் நாம் இம்மக்களுடைய கோரிக்கைகளை கட்டாயமாக நிறைவேற்றுவோம். எமது சின்னம் தாமரை மொட்டு எனவும் அதை வெற்றிப்பெற வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. தலைவா உமது கிடுக்குப்பிடிக்குள் இனவாதிகளை கட்டுப்படுத்துவீர் என்ற நம்பிக்கை எமக்குண்டு்.வென்றுவா தலைவா

    ReplyDelete

Powered by Blogger.