ஜனாதிபதி வேட்பாளர்களிடம், வடக்கு முஸ்லிம்களின் கோரிக்கை
எதிர்வரும் இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் இலங்கையின் வடமாகாணத்திலிருந்து 1990 ஒக்டோபர் 30ல் பலவந்த வெளியேற்றத்திற்கும் இனசுத்திகரிப்பிற்கும் உள்ளாக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களஇ; தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பகிரங்கமாக முன்வைப்பதுடன், இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் தங்களது கருத்துக்களையும் எதிர்கால தங்களது நடவடிக்கைக்கான உத்தரவாதங்களையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென நமது மக்கள் கோருகின்றனர்.
தங்களின் கருத்துக்களும் உத்தரவாதங்களும் தெளிவாக அமையும் பட்சத்தில் இத்தேர்தலில் நாம் எமது பங்களிப்பினை உரியவருக்கு மேற்கொள்வதற்குரிய தயாராக இருக்கின்றோம்.
கடந்த முப்பதாண்டு காலத்தில் பயங்கரவாதச்சட்டங்கள்இ மற்றும் அச்சுருத்தல்கள் காரணமாக தமது சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்க்கப்பட்ட அனைத்து மக்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள். இனரீதியாக வெளியேற்றப்பட்டவர்கள் என்பதை அடிப்படையாக வைத்து மீண்டும் அவரவர் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள்இ உட்கட்டமைப்பு வசதிகள்இ அனைத்தையும் பாரபட்சமின்றி விஷேட வேலைத்திட்டத்தின் ஊடாகஇ எவ்வித அரசியல் தலையீடும் சுரண்டல்களும்இ இடம்பெறாமல் குறுகிய காலத்தில் இம்மக்கள் அனைவரும் நன்மையடையக்கூடிய வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
முப்பது வருடம் கடந்துவிட்ட நிலையில் தற்போது மீள்குடியேறுவதில் ஆர்வம் காட்டும் பல குடும்பங்களுக்கு குடியிருக்க சொந்தக் காணியும் வீடும் இல்லாமல் இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மக்கள் இதனால் மீள்குடியேற முடியாமலிருக்கின்றனர். இம்மக்களுக்கு சொந்தக் காணிகளை வழங்க ஏற்பாடு செய்வதுடன் அக் காணியில் வீடு மற்றும் அனைத்து உட்கட்டுமானப் பணிகளும் செய்துதரப்பட வேண்டும்.
உள்ளூராட்சி தேர்தல் தொகுதிப்பிரிவில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராம உத்தியோகத்தப் பிரிவில்( ) சனத்தொகையின் அடிப்படையில் இரண்டு வட்டாரமாக கருதப்பட்டு இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய இடத்தில் ஒரு வட்டாரமாக இரண்டையும்( ) கணக்கிடப்பட்டதால் ஒரு உறுப்பினரேயே மக்கள் பெற்றுக் கொண்டனர் எனவே இரண்டு உறுப்பினரைப் பெறக்கூடிய வகையில் இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
வடமாகாண முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் பிரதிநிதித்துவம்இ நியாயமான வளப்பங்கீடுஇ நிர்வாகம் கல்வி போன்ற விடயங்களில் விகிதாசாரத்திற்கு ஏற்ப நியாயமான பங்குகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வடக்கில் ஒரு சிறுபான்மையினராக முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக்கூடிய அரசியல் சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும். மன்னார் தேர்தல் தொகுதியை (30மூ முஸ்லிம்கள்) இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்க வேண்டும். இதனை அரசியல் சீர்த்திருத்தத்தில் உள்வாங்க வேண்டும்.
வடமாகாண முஸ்லிம் மக்கள் இடப்பெயர்க்கப்பட்ட பொழுது இழந்த அசையும் அசையாத சொத்துக்களுக்குரிய நஷ;ட ஈட்டினை தற்கால பெறுமதிக்கேற்ப சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு இம்மக்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஐ.நா வில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலைமாற்றத்திற்கான நீதி (வுது ) வடமாகாண முஸ்லிம்கள் விடயத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மாகாண சபையில் சிறுபான்மையினருக்கு அதிகரித்த பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் அரசியல் சீர்திருத்த ஏற்பாட்டில் 20மூ மாகாணசபை பிரதிநிதித்துவம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் மற்றும் கூட்டுத்தாபனங்களில் நியமனங்கள் நடைபெறும் போது வடமாகாண முஸ்லிம்களுக்குரிய ஒதுக்கீட்டினை விகிதாசாரத்திற்கு ஏற்ப அந்த மாவட்டங்களிலேயே நியமனங்களை வழங்க வேண்டும்.
யுத்த சூழ்நிலையில் தங்களது பாரம்பரிய காணிகளை பாதுகாப்புத்துறையினர் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் போன்றவர்களிடமும் வேறு காரணங்களினாலும் இழந்துள்ள வடபகுதி முஸ்லிம்களின் காணிகளை அரசாங்கள் விடுவித்து உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இக்காணிகளில் அவர்கள் தங்களது விவசாயம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளும் தாமதியாது எடுக்க வேண்டும்.
மௌலவி. சுப்யான்
செயலாளர்
வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு.
யா அல்லாஹ் எமது இந்த சகோதரர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பாயாக .-மர்சூக் மன்சூர் - தோப்பூர்
ReplyDeletefake photo
ReplyDelete