ரணில்தான் எதிர்கட்சித் தலைவர் - சபாநாயகர் அறிவிப்பு
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் இதுவரை காணப்பட்ட சம்பிரதாயத்தை உடைத்தெறிய கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான ரணில் விக்கிமரசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட வேண்டும்.
இந்த விடயத்தில் பிரச்சினைகள் காணப்பட்டால் கட்சிக்குள் அது தொடர்பில் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
வெட்கம்கெட்ட மனிதர் என்று சொல்லுற இவர்களுக்கு தான் .கட்சி விரும்பாத தலைவர் ஏன் இன்னும் அங்கு இருக்க வேண்டும்.
ReplyDeleteBETTER SNY WAY RANIL HAVE ONE SEAT AT ALL.ALL OF YOU SAME KUTTAI
ReplyDelete