சஜித்திற்கு 95 வீதமான தமிழர்கள் வாக்களிக்க வேண்டும், சர்வாதிகார ஜனாதிபதி தேவையில்லை - சம்பந்தன்
எமது மக்கள் நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடிய வரையே ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரியை அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலர் எதை தெரிவித்தாலும் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க அர்ப்பணிப்புடன் பல தசாப்தங்களாக அயராது செயற்பட்டு வருகிறோம்.
எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்.
தற்போது போட்டியில் ஈடுபடுபவர்களில் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டிற்குள் உச்சபச்ச அதிகாரப் பகிர்வுடனான அரசியல் அமைப்பு மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஆனால், கோத்தபாய முற்றிலும் சிங்கள மக்களின் வாக்கிலே வெல்வேன் என கூறி வருகிறார். இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு தீர்வை தராது மட்டும் அல்லாது இந்த நாட்டிற்கும் பொருந்தாது கோத்தபாய கடந்த காலங்களில் ஒரு சர்வாதிகாரியாக செயற்பட்டு எமது மக்களின் அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி.
நாம் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருவது எமது உரிமைக்காக அதனை விடுத்து அவரிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாருடன் காலத்தில் நடந்து அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன? இந்நிலையில், சின்னப்பொடியனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கிராமம் தோறும் சென்று வாக்கு கேட்கின்றார்.
அதனால், இவ்விடயங்களை கருத்தில் கொண்டு எமது பிரச்சினைகளை சுதந்திரமாக பேசுவதற்கு சஜித்திற்கு 95 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒவ்வொரு வாக்கும் அது கோத்தபாயவிற்கே சேரும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐயா! நான் ஒரு முஸ்லிம் இல்லையெனில் உம்மைக் கும்பிடுவேன்.ஆனால் இந்த மூளைகெட்ட பதவி பணம் புகழ் என மோகம் கொண்ட சுயநல முஸ்லிம் தலைவர்கள் சமூகத்தைப்பற்றி சிந்திக்காமல் சஜித்திற்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துகின்றனர்.
ReplyDeleteஇந்நிலையில் சஜித் வென்றால் நீங்கள் குமண தொடங்கி புத்தளம் வகையான ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்தையும் அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் கபளிகரம் செய்வீர்கள். இந்த சிறு அடிப்படை அறிவு கூட இல்லாத முஸ்லிம் சமூகத்தில் உங்களைப் போன்ற சமூக தலைவன் ஒருவர் இல்லையே என்ற ஆதங்கம் மனதில் உள்ளது. அப்படி இருந்தாலும் இப்பேச்சமூகம் அவர் பின்னால் போகாது.மாறாக சா நக்கிய தலைவனுக்கும் உணர்ச்சித் தலைவனுக்கும் பின்னால் தான் போகும்.
ஒரு சர்வாதிகாரியை!ரொம்ப சரி .........? அத்தோடு
ReplyDeleteகொள்ளை,கொலை,அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை எதிர்க்கும் ஒரு கூட்டு அணி(NPP அனுர) போட்டியில் முனைப்புடன் போட்டியிடுகிறது, இவர்களை பலப்படுத்துவோம்