உடன் அமுலாகும் வகையில், நீக்கப்பட்டுள்ள 7 வரிகள்
பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக அறிவிடப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி,
பங்குச் சந்தை இலாப வரி,
வட்டி பிடிமான வரி,
கடன் சேவை வரி,
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் பற்று வரி
உள்ளிட்ட 7 வரிகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக 15 சதவீதமாக அறிவிடப்படும் வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 8 சதவீதம் வரை குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நிர்மாணத்துறைக்காக 28 சதவீதமாக அறிவிடப்பட்ட வருமான வரி 14 சதவீதம் வரையிலும், தொலைத்தொடர்புகள் வரி 25 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் செலாவணியும், வருமான வரியிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Bunch of carrots before the election, as the target was two third majority, in order to achieve the target these carrots were offered to Sri Lankan masses.Enjoy these and vote for phohottuwa.
ReplyDelete