72 மணித்தியாலத்தில் அரங்கேறவுள்ள, முக்கிய நாடகங்கள் - மக்களே ஏமாந்து விடாதீர்கள்
தேர்தல் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர எஞ்சியிருக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றவும், கதைகளை பரப்புதல் மட்டுமல்லாது நெஞ்சுவலி ஏற்படுவது உட்பட மக்கள் எண்ணிப்பார்க்க முடியாத பல சம்பங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த போலியான நடிப்புகளை கண்டு மக்கள் ஏமாந்து விட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். தம்புள்ளையில் இன்று -12- நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பல்வேறு அணிகள் புலனாய்வு பிரிவின் அறிக்கை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கை எனக் கூறி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும் வாக்கு விதங்கள் என்று செய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
கருத்து கணிப்பு அறிக்கை அல்லது சம்பவங்களை நடித்து அரங்கேற்றுவது மற்றும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை கவர கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
போர் முடிந்துள்ள நிலையில் ஒரு தரப்பு மீண்டும் போலியான அச்சத்தை பரப்பி போரை விற்பனை செய்கிறது. ஈஸ்டர் தாக்குதலால் நாடு பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாக காட்டி மக்களிடம் சென்று வாக்கு கேட்கின்றனர். மற்றுமொரு தரப்பு கோத்தபாய பூச்சாண்டியை காட்டி மத்திய வங்கியின் கொள்யை மறைத்து வாக்கு கேட்கிறது. இந்த இரண்டு தரப்பினரையும் நிராகரிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
கேகாலை ஹெம்மாத்தகமை பிரதேசத்தில் மூளை வளர்ச்சி குறைந்த யுவதி ஒருவர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் குறித்து நான் உட்பட பொதுமக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
இனவாத வாக்குறுதி அரசியலை தோற்கடித்து கொள்கை அரசியலுக்கு மக்கள் செல்ல வேண்டும். சட்டம் சீர்குலைந்துள்ளதால் பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை இது சம்பந்தமாக நடந்த அண்மைய சம்பவமாகும்.
நாட்டில் பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருளுக்கு எதிராக மக்களின் நிலைப்பாடு ஒன்று உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தனது பதவியில் இறுதி நாட்களில் பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கி உலகம் ஆச்சரியப்படும் தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment