Header Ads



7 வருடங்களின் பின்னர் மத்தலயில், தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத எமிரேட்ஸ் விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நிலவிய அடை மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து வந்த எமிரேடஸ் விமான சேவையின் ஈ.கே - 652 விமானம் நேற்று மாலை 6.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்துள்ளது.

எனினும் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மாலை 6.56 மணி வரை மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவையின் விமானம் ஒன்று 7 வருடங்களின் பின்னர் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

இந்த எமிரேட்ஸ் விமானம் போயிங் 777 ரக விமானமாகும். இதில் 76 பயணிகள் மற்றும் 16 ஊழியர்கள் பயணித்த நிலையில் பயணிகள் ஒருவரையும் வெளியே இறக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விமானத்தின் என்ஜினில் பறவைகள் மோதியமையினால் விமானி மத்தல விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.