Header Ads



கோத்தாபய பொறுப்பேற்ற 6 மணித்தியாலங்களுக்குள், முன்னறிவிப்பின்றி வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்


சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திடீர் அவசர பயணமாக கொழும்பு வந்தடைந்துள்ளார்.

சிறப்பு விமானம் மூலம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.

இந்திய வெளிவிவாகர அமைச்சர் ஜெய்சங்கருடன, இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் இருவரும் கொழும்பு வந்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவை இன்றிரவு சந்திக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச கடமையைப் பொறுப்பேற்ற ஆறு மணித்தியாலங்களுக்குள்ளாகவே, இந்திய வெளிவிவகார அமைச்சர்  முன்னறிவிப்பின்றி, கொழும்பில் வந்திறங்கியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 comments:

  1. Please don't believe this RSS bad political Agent.?

    ReplyDelete
  2. Sri Lankan Foreign service sticky follows the diplomatic norms and traditions of India, even salary scales of Sri Lankan officials overseas is based on that of the Indian system, It is absolutely necessary to inform the Foreign Ministry of Sri Lanka prior to the visit of Indian counterpart for necessary arrangements, of course this visit would have been arranged by Indian high commission in Colombo, yet this adhoc visit would have a deep sense of inner arrangements India would have planned earlier or India would have known the protocol of new president.

    ReplyDelete
  3. political cricket match between india and srilanaka is going to start.sri lanakas new captain is new to game.he must bat very carefully as his coch china may give wrong advise.all depends on srilanakn balling coch MAHINDA.WHETHER IT WILL BE A TEST MATCH OR 50 OVER THE POLITICAL FIELD CONDITION WILL DECIDE.

    ReplyDelete

Powered by Blogger.