53 பில்லியன் பீப்பாய், கச்சா எண்ணெய் கிடங்கை கண்டுபிடித்ததாக ஈரான் அறிவிப்பு
ஈரான் உலகளாவிய எரிசக்தி வல்லரசு நாடாக கருதப்படுவதுடன், உலகின் எண்ணெய் இருப்புக்களில் 10 சதவீதமான எண்ணெய் வளத்தை ஈரான் கொண்டுள்ளது.
இந் நிலையில் மேலும் 53 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை கொண்ட புதிய கிடங்கொன்றை கண்டுபிடித்துள்ளதாக அந் நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி இன்றைய தினம் -10- தெரிவித்துள்ளார்.
குறித்த கச்சா எண்ணெய் கிடங்கானது ஈரானின் எண்ணெய் வளம் கொண்ட குஜெஸ்தான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஈரானின் கச்சா எண்ணெய் மூன்றில் ஒரு பங்காக உயர்வடைந்துள்ளதுடன் மொத்தமாக தற்போது ஈரானிடம் 150 பில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் உள்ளது.
Post a Comment