52 நாள் சதிக்கு துணை போகாமையால் என் மீது குறி வைத்துதுள்ளார்கள் - றிஷாட்
இனவாதிகளின் வக்கிர புத்தியினாலும் துவேஷ நடவடிக்கையினானும் சிறுபான்மை சமூகம் நொந்து நூலாகி விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னிலையில் அமைச்சர் றிஷாட் எடுத்துரைத்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை ஆதரித்து தர்ஹா நகரில் நேற்று மாலை (10) இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் .
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இங்கு பங்கேற்றிருந்தார்.
யுத்தம் ஓய்ந்ததன் பின்னர் இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது தமது கைவரிசையை காட்டத் தொடங்கினர். சுமார் 10 வருடங்களாக தொடர்ந்த அவர்களின் துவேஷ நடவடிக்கைகள், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் உக்கிரமடைந்தது. கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களின் மிலேச்ச நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. பயங்கரவாதத்தை வெறுக்கும் அப்பாவி மக்களுடன் இதற்கு முடிச்சுப் போட்டு வீண்பழி சுமத்தினர். என்னையும் தொடர்புபடுத்தினர். எனது நற்பெயரை நாசமாக்கினர். அதிகாரத்தை அடைய காத்திருந்த இந்த கழுகுக் கூட்டம் சகோதர மக்களிடம் இனவாதத்தை உசுப்பி விட்டதை நீங்கள் அறிவீர்கள்.
"நான் வடக்கில் பிறந்தவன் அகதியாக வந்தவன். துன்பப்பட்ட வன்னி மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவன். எனவே அவர்களின் நலன்களை கவனிக்க வேண்டியதும் துயரங்களை துடைப்பதும் என் பொறுப்பு. அதனைத்தான் செய்கின்றேன்.
மெடம்! நீங்களும் இந்த மக்களுக்கு உதவியிருக்கின்றீர்கள்" என அமைச்சர் தெரிவித்தார்.
52 நாள் சதி முயற்சிக்கு துணை போகாத, வேக்காட்டிலேயே இந்த கூட்டம் இவ்வாறு என் மீது குறி வைத்து தாக்குகின்றது.
சஹ்ரானை என் வாழ் நாளில் கண்டதில்லை. கதைத்ததுமில்லை. எனினும் இந்த ஈனச்செயலுடன் என்னையும் தொடர்புபடுத்தி பொலிசில் முறையிட்டனர். நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து, அதற்கு எதிராக வாக்களிக்கும் எம் பிக்கள் ஊருக்கு வரவேண்டாமென பெனர்களும் கட் அவுட்களும் கட்டப்பட்டன. எனினும் நான் நிரபராதி என பொலிசாரும் தெரிவுக்குழுவும் அறிவித்தது. இருந்தபோதும் இனவாதிகள் அடங்கவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது தேர்தலை மையமாக வைத்து அவர்கள் பெட்டிப்பாம்பாக அடக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை தேடி அலைகிறார்கள். எனினும் இவர்களின் சுயரூபம் மாறப்போவதில்லை. சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் இவர்களின் கொட்டம் அடங்குமென்ற நம்பிக்கையிலேயே அவருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான பாயிஸ், அம்ஜாத் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஹசீப் மரைக்கார் ,ஹிசாம் சுஹைல் ஆகியோரும் பங்கேற்றனர்
ரிசாட் சேர் தமிழ் புலிப்பயங்கரவாத்த்தால் நீங்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான். அரசியலுக்காக அதையே பிச்சைக்காரனின் புண் போல் காட்டாதீர்கள்.
ReplyDelete“அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள்,அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்.அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் அவர்களை விட மேலானவன்” அல்லாஹ்வின் தண்டனை நிச்சயமாக இந்த இனவாதிகலுக்கு கிடைக்கும்.
ReplyDelete