4 ஆளுநர்களுக்கு விடுமுறை வழங்குங்கள் - ஜனாதிபதிக்கு கடிம் அனுப்பியது தேர்தல் ஆணைக்குழு
கிழக்கு, வடமேல், வடமத்திய, மற்றும் மேல் மாகாணங்களின் ஆளுநர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விடுமுறை வழங்கி, அரச வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துவதை தடை செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இது தொடர்பாக நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏ.ஜே.எம். முஸம்மில் மேல் மாகாண ஆளுநராகவும், பேசல ஜயரத்ன வடமேல் மாகாண ஆளுநராகவும், சரத் ஏக்கநாயக்க வடமத்திய மாகாண ஆளுநராகவும், ஷான் விஜேலால் டி சில்வா கிழக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்த ஆளுநர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெறச் செய்வதற்காக அரச வளங்களை பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி நடுநிலை வகிக்கும் போது ஜனாதிபதி மாகாண பிரதிநிதிகள் அரசியல் ஈடுபடுவது சிக்கலுக்குரியது எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், இந்த நான்கு ஆளுநர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விடுமுறை வழங்குமாறும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனே நடைமுறைப்படுத்திடுவாரு பாருங்களேன்...............
ReplyDeleteமர்சூக் மன்சூர்- தோப்பூர்