Header Ads



ஓமானில் துன்புறுத்தலுக்குள்ளான 42 இலங்கைப் பெண்கள் இன்று நாடு திரும்பினர்

ஓமான் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டு வீட்டு உரிமையாளர்களால்  பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாமல் பணிபுரிந்த இலங்கை பணிப்பெண்கள் 42 பேர் இன்று (27) நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணிபுரிந்த நிலையில் அதன் காரணமாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு உரிமையாளர்களால்  பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாத நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்ற இந்த பெண்கள், அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் ஊடாக வேறு வீடுகளுக்கு குறித்த பெண்கள் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குரிய ஊதியத் தொகை குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அங்கிருந்து தப்பியுள்ள இந்த பெண்கள், அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்த பின்னர் அங்குள்ள தடுப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. வாசகர்களின் நன்மைக்காகவும், உண்மையைத் தௌிவுபடுத்துவதற்காகவும் இந்த விடயத்தைப் பற்றி எழுதவேண்டியிருக்கின்றது. ஓமான் நாட்டில் ஆயிரத்தில் ஒரு ஓமானி குடும்பம் பணிப் பெண்ணை தவறாக நடத்தலாம். ஆனால் பெரும்பான்மையானவர்கள் மிகவும் நல்லவர்கள். நடக்கும் உண்மை என்னவென்றால், பணிப்பெண்களுக்கு ஏனைய அரபு நாடுகளை விட அதிக சுதந்திரம் இங்கு காணப்படுகின்றது. அந்த சுதந்திரத்தை பாவித்து இந்த பணிப் பெண்கள் பல இடங்களிலும் இலங்கை ,இந்திய, பாகிஸ்தான்,பங்காளி நபர்களைச் சந்திக்கின்றனர். இவர்களுடனான தொடர்பு மிக விரைவில் காதலாக மாறுகிறது. அத்துடன் அவனுடைய காமஇச்சையை தீர்த்துக் கொள்ள பலதும் பத்தும் ஆயிரமாயிரம் சம்பளம் வாங்கித் தருவதாகவும் கூறி அவளை அழைத்துச் சென்று அவனுடைய தேவைகளுக்காக அவள் பயன்படுத்தப்படுகின்றாள்.இறுதியில் நாடு செல்ல வேண்டும் என்னும் போது பொய்யையும் புரட்டையும் சொல்லி இலங்கை தூதரகத்தை வந்தடைகின்றன. ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகம் அவர்களின் கதைகளை மாத்திரம் கேட்டு எந்த விசாரணைகளும் இன்றி வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான டிக்கட்களை பெற்று அனுப்பி வைக்கின்றன. இந்த இலங்கைப் பணிப் பெண்கள் யாரும் உண்மையை கூறுவதில்லை. 100க்குத் 99 வீதமானவர்கள் காமச்சல்லாடல்களை முடித்துக் கொண்டு வீட்டு நினைவு வந்தால் ஆயிரம் பொய்களைச் சொல்வி வீடுவந்துசேர்வார்கள் அவர்களின் கதைகளை இங்குள்ள பத்திரிகைகள் சோகத்துடனும் அரபுகளுடன் வெறுப்புனும் பிரசுரிக்கின்றன. ஆனால் உண்மை அப்படியல்ல என்பது எனது சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகின்றேன்.

    ReplyDelete
  2. Thanks for your information, noblog!

    ReplyDelete

Powered by Blogger.